Star Mountain

My travels and other interests

Gandhiji- 150th Birth Anniversary (October 2,2019)

       

(Gandhi’s Statue at Union Square, Manhattan, New York)

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!
அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ?
என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்.

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனி லுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் “ஒத்துழை யாமை”
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!

(பாரதியின் ஒப்பற்ற கவிதை. மகாத்மாவுக்கு மகாகவி சூட்டிய புகழாரம். எழுதிய ஆண்டு தெரியவில்லை, பிரசுரித்த விபரம் தெரியவில்லை; 1919-20 என்பது ஒரு யூகம்;  1919-இல் மகாத்மாவை பாரதி சென்னயில் சந்தித்தார்; பாரதியார் 1921-இல் அமரர் ஆனபின் இக்கவிதை மறுபிரசுரமானது, சுதேச கீதங்கள்- இரண்டாம் பாகம், செல்லம்மா பாரதி வெளியீடு, 1922; தகவல்- பாரதி ஆய்வாளர்கள் சீனி.விசுவநாதன், ரா.அ.பத்மநாபன் புத்தகங்கள்)

  Long may you live, Gandhi Mahatma
  You who brought new life to Bharat,
  The land which of all lands on earth
  Lay most degraded, poverty-stricken,
  Ruined, forsaken, of freedom bereft.

Endless glory, yea, a crown
Universal you have gained
Devising a simple plan whereby
Our people can shake off slavery,
Breathe free, grow rich and learned and wise,
And show to all the world the way
Of  true, enlightened citizenship.

Are you the monkey-god who brought,
As an antidote to ophidian noose,
The healing herb from the high Himalaya?
Or are you Sri Krishna who held up
The hill to ward off thunder and lightning?

Simple, simple, new and simple
Is the cure that you have found
For heteronomy, painful and chronic
Malady:”Count as your own life
The life of him who comes to kill you.
Know that every human being
Is an image of God, Child of God.”
This wisdom bold and true you dared
To thrust into grim politics
Rife with sordid murder and strife.

Shunning the way of war which is
But murder on a massive scale,
You chose a method much more effective,
The path of dharma prepared by seers
And servants of God, Satyagraha,
Unfailing, fruitful, for bringing to Bharat
A future bright, and to the world
Forgetfulness of deeds of hate
May this good dharma live for ever.

(Bharatiyar,  wrote it probably in 1919-20;  original publication details are not available; Bharati met Gandhi in 1919 in Chennai; After Bharati’s death in 1921, the poem was republished by his wife Chellamma Bharati in Swadesa Geethangal, Volume 2, 1922; Source- Books by Seeni.Viswanathan and R.A.Padmanabhan. This poem was translated by Prof. K.Swaminathan, Bharati Patalkal,  Edited by T.N.Ramachandran, Tamil University, Thanjavur, 1989)

 

 

 

You Might Also Like