admin

முகப்பு அட்டை (2000)

  கிராமப்புறத் தமிழகம் தற்காலப் பிரச்சனைகளும் மக்கள் எதிர்பார்ப்புகளும்   சமூகவியல் ஆய்வுத் திட்டம் ஆசிரியர் குழு ந. முருகானந்தம் நியூஜெர்சி, அமெரிக்கா கோ. ராஜாராம் கனெக்டிகட், அமெரிக்கா ஒருங்கிணைப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன் விருதுநகர்   சிந்தனை வட்டம் நியூஜெர்சி அமெரிக்கா 2000    

admin

கிராமப்புறத் தமிழகம்- திட்டமும் முடிவுகளும்- முகவுரை (2018)

கிராமப்புறத் தமிழகம்- பிரச்சனைகளும் மக்கள் எதிர்பார்ப்புகளும் மக்கள் நேர்காணல் (சர்வே) முடிவுகள் கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு- நேற்று இன்று நாளை என்ற ஆய்வுப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டோம்.  விவசாயம், பொருளாதாரம், மாநில மத்திய உறவுகள் முதலிய தலைப்புகளிலிருந்து நாட்டியம், நாடகம், சினிமா முதலிய துறைகள் வரை பல தலைப்புகளில் வல்லுனர் பலர் ஆய்வுக்  கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். புத்தகங்கள் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள பல நூலகங்களுக்கும் அன்பளிப்பாய் அனுப்பப்பட்டன. டாக்டர். க.ப. அறவாணன் அவர்கள் இந்திய ஒருங்கிணைப்பாளராகவும், …

admin

Rural Tamilnadu- Project Description and Execution (2018)

         Rural India/Tamilnadu- Survey and results                In 1997 I edited a review book, Tamilnadu- Yeserday-today and tomorrow. Status of several topics were analyzed starting from agriculture, economy, center-state relations etc. to dance, drama and cinema. The analysis was carried out by experts in the respective topics. The review books were distributed …

admin

திட்ட அறிமுகம் (2000)

அறிமுகம் அமெரிக்காவில் உள்ள சிந்தனைவட்டம் (நியூ ஜெர்சி) & தமிழ் அசோசியேஷன் ஆப் நியூ ஜெர்சியும், இணைந்து தமிழகம் குறித்த சமூகவியல் ஆய்வுப்பணியொன்றை சில ஆண்டுகளுக்கு முன்பாகத் துவக்கியது. இந்த ஆய்வுப் பணியில் சுதந்திரத்திற்குப் பிறகான 50 வருடங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, கலாச்சார, வாழ்வியல் மாற்றங்களை, அதன் விளைவுகளை  அறிந்து கொள்ளவும், இது பற்றித் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தமிழ் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், வளர்ச்சிகள், பிரச்சனைகள் குறித்து …

admin

பத்துப் பிரச்சனைகள் (2000)

தமிழகத்தின் பத்து முக்கிய பிரச்சனைகள் தமிழக மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கள ஆய்வின் வழியாக சில முக்கியப் பிரச்சனைகள் கண்டறியப்பட்டன. இந்தப் பிரச்சனைகள் கடந்த 50 ஆண்டுகளாகத் தீராமல் தொடர்ந்து வருகின்றன. இதன் தீவிரம் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறக்கூடும். ஆனால் இப்பிரச்சனைகளை மக்கள் தங்கள் ஆதாரமான பிரச்சனைகளாகக் கருதுகிறார்கள். குடிநீர் மருத்துவம் ரேஷன் போக்குவரத்து வேலைவாய்ப்பின்மை ஜாதி கழிவுநீர், சுகாதாரம் அரசாங்க உதவியின்மை முறையான வணிக ஏற்பாடுகள் பாதுகாப்பான இருப்பிடம் இவைகளோடு முறையற்ற பஞ்சாயத்து நிர்வாகம், அரசியல் தலையீடு, …

admin

கவனிக்கப்படாத சில பிரச்சனைகள் (2000)

கிராமப்புற வாழ்வும் கவனிக்கப்படாத சில பிரச்சனைகளும் விவசாயம் தமிழகத்தில் முழுமையாக விவசாயம் நடைபெறும் மாவட்டங்களாக நான்கைந்து மாவட்டங்களே உள்ளன. இந்த மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் ஆற்றுப் பாசனத்தை நம்பியே இருக்கின்றன. இந்த மாவட்டக் கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாகக் கொண்ட போதும் விவசாய வேலைகளுக்கான வேலையாட்கள் கிடைப்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதர பகுதி விவசாயிகள் பாசனத்திற்கான கிணறு, கண்மாய், ஏரி போன்றவைகளை நம்பியிருக்கிறார்கள். மழையை நம்பிய விவசாயம் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறுகிறது. …

admin

மாவட்ட ரீதியாக பத்துப் பிரச்சனைகள் (2000)

மாவட்ட ரீதியாக முக்கியப் பிரச்சனைகள் கன்யாகுமரி மருத்துவம் அரசு உதவியின்மை சாதி ரேஷன் பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் வீடு போக்குவரத்து வேலையின்மை குடி, சாராயக் கடைகள் திருநெல்வேலி ரேஷன் குடிநீர் மருத்துவம் அரசு உதவியின்மை போக்குவரத்து முறையான விற்பனை மார்க்கெட் சாதி வேலையின்மை சுகாதாரம் சாராயம் மற்றும் போதை தூத்துக்குடி குடிநீர் மருத்துவம் போக்குவரத்து தலித் பிரச்சனை வேலையின்மை மதப்பிரச்சனை நிர்வாகச் சீர்கேடு சுகாதாரம் ரேஷன் சுடுகாடு விருதுநகர் குடிநீர் மருத்துவம் ரேஷன் வேலையின்மை நிர்வாகச் சீர்கேடு …

admin

பிரச்சனைக்கான பொதுக் காரணங்கள் (2000)

பிரச்சனைக்கான பொதுக்காரணங்கள் தமிழக கிராமங்களில் காணப்படும் பெரும்பான்மை பிரச்சனைகளுக்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடு மற்றும் அரசு அமைப்புகள் சரிவர இயங்காததால் ஏற்படும் விளைவுகளே. ஒவ்வொரு பஞ்சாயத்தும் அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பண உதவி பெற்றுக் கொள்கிறது. திட்டமிடுகிறது. இந்தத் திட்டம் பெரிதும் சுயலாப நோக்கில் செயல்படுவதாலும், முறையான எதிர்கால திட்டமின்மையாலுமே குடிநீர், கழிவு நீர், சாலை, போன்றவை கிடைப்பதில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அரசாங்கத் திட்டங்கள் உதவிகள் பற்றிய அறிமுகமோ அதற்கான வழிமுறைகளோ …

admin

மாதிரி கேள்வித்தாள் (2000)

மாதிரி கேள்வித்தாள் சிந்தனை வட்டம் தமிழக கிராமப்புற மாறுதல்கள்   பெயர்:          கணபதி                   வயது: 38 ஊர்:             கொல்லங்குடி          தொழில்: விவசாயம் மாவட்டம்:    சிவகங்கை 1. சுதந்திரமாகி 50 ஆண்டுகளாகியும் கிராமம் மேம்பாடு ஆடையவில்லை. பிரச்சனைகள் பெருகியுள்ளன. இன்றும் தீராத கிராமப்புற பிரச்சனைகளாக நீங்கள் நினைப்பவற்றைக் குறிப்பிடவும் 1. வேலையின்மை 2. குடிநீர் 3. மருத்துவம் 4. சுகாதாரம் 5. ரேஷன் 6. அரசு உதவியின்மை 7. பஞ்சாயத்து நிர்வாகம் 8. விலைவாசி 9. …